• Jan 21 2025

அரவிந்த் சாமியிடம் தனது விருப்பத்தை நேரடியாகவே கூறிய மீனா! சுடச்சுட அவர் கொடுத்த பதில்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

80, 90 ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. தமிழில் மட்டுமின்றி பலமொழிகளிழும் ரொம்ப பிஸியாக நடித்து வந்தார்.

ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், காலப்போக்கில் அவர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். ரம்பா தொடை அழகி என்றால், இவர் கண்ணழகியாக காணப்பட்டார்.

தற்போது மீனாவின் மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக விஜயின் தெறி திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பின் அரவிந்த்சாமி உடன் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், நான் எத்தனை நடிகர்களோடு நடித்திருக்கின்றேன். ஆனால் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது அரவிந்த் சாமியுடன் தான். எனினும் அவர் கூட ஒரு  படம் கூட நடிக்கவில்லை என நடிகை மீனா பேட்டியொன்றில்  கூறியுள்ளார்.


மேலும் அரவிந்த் சாமியுடன் ஒரு படத்தில் ஆவது நடித்துவிட வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டேன். அப்போது அவருடன் நடிக்கும் வாய்ப்பு ஒன்று வந்தது. ஆனால் எனக்கு அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்சினையால் நடிக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து எனது மகள் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்த்சாமி உடன் நடித்து விட்டார். அந்த படப் பிடிப்பின் போது நான் அவருடன் நடிக்க ஆசைப்பட்ட விஷயத்தை கூறினேன். அதற்கு அரவிந்த்சாமி, கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்திருந்தார். இவ்வாறு நடிகை மீனா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement