• Jan 21 2025

காக்காவ விட மோசமானவ நீ... உனக்கு அசிங்க அசிங்கமா ...? மீண்டும் தனது புரட்சியை தொடங்கிய சுசி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரபல பாடகியாக பயணித்து வந்தவர் தான் சுசித்ரா. ஒரு காலத்தில் இவருடைய பாடல்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்பட்டது.

2005 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். 12 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள், சுசி லீக்ஸ்  என்ற விவாகரத்துக்கு பின்பு சட்டரீதியாக பிரிந்தார்கள்.

அண்மையில் தான் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் சேர்ந்து ரூமுக்குள் சென்றால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை என்றும் அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். அது மட்டும் இன்றி திரிஷா, கமலஹாசன், ஷாருக்கான் என முக்கிய பிரபலங்களையும் இழுத்து வச்சு செய்திருந்தார்.

இது தொடர்பில் பேட்டியளித்த கஸ்தூரி, இந்த விஷயத்தை பற்றி பேச எனக்கு கஷ்டமாக உள்ளது. சிதைந்த ஒரு உள்ளம் உதவி கோரி கூக்குரல் இடுவது தான் எனக்கு கேட்கின்றது. அவருக்கு ஒரு உதவி தேவைப்படுகிறது. அது மருத்துவ உதவியோ, அல்லது மனநல உதவியோ.. அவருடைய பிரச்சினைகளை சொல்லி தீர்த்துக் கொள்ள ஒரு துணை இல்லை. அதனால் தான் அவர் மீடியாவை நாடுகிறார். மேலும் கார்த்திக் குமாரை திருமணம் செய்யும்போது சுசித்ராவின் அம்மா , அப்பா இருவருமே உயிரோடு இல்லை என சொல்லி இருந்தார்.


இந்த விடயம் நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு இதற்கு தனது தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார் சுசித்ரா.

அதன்படி அவர் கூறுகையில், எனது அப்பா, அம்மா  விபரீத முடிவு எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்கள் என கஸ்தூரி கூறினார். அது நிச்சயமாக உண்மை இல்லை. எனது அம்மா, அப்பா பற்றி தப்பா பேசின அந்த அம்மாவுக்கு தான் அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது. கஸ்தூரியை என்ன என்ன கெட்ட வார்த்தையால் திட்டலாம் என்று ஜோசித்துக் கொண்டுள்ளேன்.

ஆனாலும், அந்த பொறுப்பை வேறு யாருக்காவது கொடுக்க நினைக்கின்றேன். உனக்கு அசிங்க அசிங்கமா கிடைக்க போகுது. நான் உன்னை அப்படி என்று தான் சொல்வேன். காக்காவ விட மோசமானவன் நீ.. செத்துப்போ  காக்கா.. அப்படித்தான் சொல்ல தோணுது.. எங்க அம்மா,  அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல தான் இறந்தாங்க.. அவங்கள பத்தி இப்படி பேசுறது சரி இல்ல.. நீ திரும்பவும் போய் மாரல் சயின்ஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணு என கஸ்தூரியை கடுமையாக திட்டி தீர்த்து மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார் சுசித்ரா.

Advertisement

Advertisement