• Jan 19 2025

போட்டியில் மண்ணைக் கவ்விய மனோஜ்.. முத்துவுக்கு கொடுக்கப்பட்ட அமோக வரவேற்பு! ஆடிப்போன விஜயா

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், முத்து மீனாவும் ஒவ்வொரு போட்டியிலும் தமது எதார்த்தமான பதிலை சொல்லுகின்றார்கள். ஒரு கட்டத்தில் மனோஜ் ரோகிணியும் ஜெயிப்பதற்காக பொய் சொல்லலாம் என பேசிக்கொள்கின்றார்கள்.

இறுதியில் சிறந்த ஜோடி யார் என்பதை அறிவிப்பதற்காக ஜட்ஜஸ் மூன்று ஜோடிகளையும் நிற்க வைக்க, அதில் மனோஜ் ஜோடி வேண்டும் என்றே ஜெயிப்பதற்காக பேசியதாக சொல்லுகின்றார்கள். இதனால் கோவப்பட்ட மனோஜ் நீங்க பொய் ஜட்ஜ்மெண்ட் சொல்லுகின்றீர்கள் என சொல்ல, அப்படி என்றால் நாம் நம்மை ப்ரூப் பண்ணுவதற்காக இதை கட்டாயம் பண்ணி தான் ஆக வேண்டும் என்று மனோஜுக்கு குறும்படம் போட்டு காட்டுகின்றார்கள்.

அதில் இவர்கள் தான் ஜெயிப்பதற்காக அடுத்தவர்களுக்கு உதவி பண்ணினோம் அவர்களை மகிழ்வித்தோம் என சொல்லுவோம் என பேசியது எல்லார் முன்னிலையிலும் போட்டுக் காட்டப்பட்டது. இதனால் மனோஜ் நோண்டியாகின்றார். மேலும் சிறந்த தம்பதி என்றால் அவர்களுக்கு இடையில் கோபம் வரத்தான் வேண்டும் அப்படி இல்லை என்றால் அவர்கள் நடிக்கின்றார்கள் ஏதோ ரகசியம் இருக்கின்றது என நடுவர்கள் சொல்லுகின்றார்கள்.

மொத்தத்தில் இந்த போட்டியில் எதார்த்தமாக விளையாடி ஜெயித்தது முத்து மீனாவு தான் என அறிவிக்கின்றார்கள். இதனால் அவர்களுக்கு செக், அவோர்ட் கொடுக்கின்றார்கள்.


அதன் பின்பு மனோஜ் ரோகினி வீட்டுக்கு வர விஜயா ஆர்த்தி தட்டுடன்  வருகின்றார். ஆனால் தாம்  ஜெயிக்கவில்லை என ரோகிணி கூற அந்த நேரத்தில் ஸ்ருதியும் ரவியும் வர அவர்களுக்கு ஆர்த்தி எடுக்கச் சொல்கின்றார் அவர்களும் தாம் ஜெயிக்கவில்லை என்று கூறுகின்றார். 

அந்த நேரத்தில் முத்துவும்  மீனாவும் மேளதாளத்துடன் வீட்டுக்கு வருகின்றார்கள். அங்கு மாலை மாற்றி தாம் ஜெயித்ததை கொண்டாடுகிறார்கள். இதனால் விஜயா அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.






Advertisement

Advertisement