• Jan 19 2025

ரோகிணிக்கு மரண பயத்தைக் காட்டிய மனோஜ்.. நம்பி ஏமாறப்போகும் மீனா

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரோகிணி தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென க்ரிஷ் அத்தை என்கிட்ட ஏன் பேசவில்லை என்று கேட்க, இல்லை என்று ரோகினி பேச ஆரம்பிக்க, என்ன இது என்று மனோஜ் ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுக்க கடைசியில் அது கனவு என தெரிய வருகிறது. அதன் பிறகு க்ரிஷின் ரூமுக்கு சென்று பார்க்க தூக்கத்தில் பயப்படும் க்ரிஷுக்கு மீனா ஆறுதல் சொல்லி தூங்க வைக்கிறார்.

மறுநாள் காலையில் வித்யாவுக்கு போனை போட்டு ரோகினி நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி அம்மாவையும்  கிரிஷையும் எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்கணும். இல்லனா மாட்டிடுவன் என்று வித்யாவுக்கு ஒரு ஐடியா கொடுத்து அதன்படி செய்ய சொல்கிறார்.

மீனா க்ரிஷுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க, நீங்க பூக்கட்ட போகலையா என்று பேச்சு கொடுக்கிறார் ரோகினி. அதற்கு க்ரிஷ  பார்த்துக் கொள்ளணும் அதனால போகல என்று சொல்லி செல்ல, மீனா போன பிறகு ரோகிணி தனது அம்மாவிடம் நான் செய்ய வேண்டிய வேலை எல்லாம் எதற்கு அவ செய்கிறார் என்று கோபப்படுகிறார்.


இதைத்தொடர்ந்து மீனாவுக்கு வித்யா போன் போட்டு அப்பார்ட்மெண்ட்ல பூ கட்டுற போட்டி வச்சிருக்காங்க உங்கள நம்பி பெயர் கொடுத்திட்டேன். வந்து பூ கட்ட பழக்கி தருமாறு மீனா விடம் கெஞ்சுகிறார்.

இதை தொடர்ந்து மீனா கிளம்ப, முத்து தடுத்து நிறுத்தி இது என்னமோ சரி இல்ல நீ போக வேண்டாம் என்று சொல்ல, நம்மள நம்பினவங்களை நாம தான் பார்த்துக் கொள்ளணும் என்று மீனா கிளம்புகிறார். ஆனால் முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட நீ போய்ட்டு அட்ரஸ் அனுப்பு என்று சொல்லுகிறார்.

இதை அடுத்து ரவியும் ஸ்ருதியும் வேலைக்கு கிளம்ப, ரோகினி வீட்டுக்கு வந்தவங்கள தவிர வீட்ல யாரும் இல்ல என்றா அவங்களாவே வீட்டை விட்டு போயிடுவாங்க என்று விஜயாவுக்கும் ஐடியா கொடுத்து அவரையும் அண்ணாமலையும் திருத்தணி கோயிலுக்கு அனுப்பி வைக்கிறார். 

விஜயா மனோஜ்க்காக வேண்டிக் கொண்டிருப்பதாக சொல்லி கோவிலுக்கு கிளம்ப, முத்து ஏன் உள்ளூர் சாமி எல்லாம் அவனுக்கு காப்பாற்ற முடியாதுன்னு வெளியூர் சாமிகிட்ட வேண்டிக்கிட்டீங்களா என்று கலாய்க்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Advertisement

Advertisement