• Jul 27 2024

சிங்கம் மீசையை விட வித்தியாசமா இருக்கே.. ‘சூர்யா 44’ படத்தின் முதல் ஷாட்.. வைரல் வீடியோ..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ’சூர்யா 44’ என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கிய நிலையில் முதல் ஷாட் படமாக்கப்பட்ட வீடியோவை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

முதல் முறையாக சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணையும் ’சூர்யா 44’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் முதல் ஷாட் எடுத்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அதில் ’சிங்கம்’ படத்தில் இருக்கும் மீசையை போலவே வித்தியாசமான மீசை தோற்றத்தில் சூர்யா காணப்படுகிறார். முதல் ஷாட்டையே அவர் ஒரே டேக்கில் நடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா, பூஜா ஹெக்டே,ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படம், சந்தோஷ் நாராயணன் இசையில்,   ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில்  சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் உருவாகி வருகிறது.



Advertisement

Advertisement