• Dec 05 2024

AI தொழில்நுட்பத்தால் பாடகர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது..!SP சரண் கருத்து..

Mathumitha / 3 days ago

Advertisement

Listen News!

பாடகர் SP பாலசுப்ரமணியம் அவர்களின் குரல் இன்றும் ரசிகர்களின் மனங்களில் அனுதாபத்துடன் தங்கியிருக்கிறது. பாடகர்களின் குரலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் AI தொழில்நுட்ப பாடல்கள் குறித்து தற்போது பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.


இதுதொடர்பாக SP பாலசுப்ரமணியத்தின் மகனும், பிரபல பின்னணிப் பாடகருமான SP சரண், AI பாடல்களைப் பற்றிய தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். தயவுசெய்து AI Voice பயன்படுத்தாதீர்கள் விட்டுருங்க என sp  பாலசுப்ரமணியத்தின் மகன் sp சரண் கருத்து "ஒரு பாடலை பாடணுமா வேணாம என்னும் உரிமை பாடகருக்கு தான் உண்டு அப்பா இருந்திருந்தா கூட வேட்டையன் பட மனசிலாயோ பாடலை பாட மறுத்திருப்பார் ai தொழில்நுட்பத்தினால் மனிதனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது" 


தனது தந்தையின் குரல் மற்றும் இசைக்கு உரிய மரியாதையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியான SP சரண், AI தொழில்நுட்பம் உணர்ச்சியை வெளிப்படுத்த இயலாதது என்பது மிகுந்த உண்மை என்று மேலும் வலியுறுத்தினார்.இதேபோல், சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. பலரும் SP சரணின் கருத்துக்களை ஆதரிக்கின்றனர், மேலும் சிலர் AI பாடல்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.


Advertisement

Advertisement