• Sep 28 2025

என்னங்க மாதம்பட்டி ரங்கராஜ்ட வாழ்க்கையை படமா எடுத்து இருக்கீங்க.?

Aathira / 5 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக குபேரா படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை பெற்றது.  வசூலிலும் சரிவை சந்தித்தது. 

இதைத்தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கும்  திரைப்படம் தான் இட்லி கடை.  இந்த படம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் தேதி  ரிலீஸ் ஆக உள்ளது.  இப்படத்தில் தனுஷ் உடன் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய்,  சமுத்திரக்கனி, ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

திருச்சிற்றம்பலத்தின் வெற்றிக்குப் பிறகு தனுஷும் நித்யா மேனனும் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.  திருச்சிற்றம்பலம்  படம்  பல தேசிய விருதுகளை பெற்றது.  அதேபோல இட்லி கடை படமும் பல விருதை பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. 


இட்லி கடை படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.  இதனை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். அதிலும் இந்த படம் நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்தை மையமாகக் கொண்டெடுக்கப்பட்டுள்ளது, அதன் காப்பி என கூறப்பட்டது. 


இந்த நிலையில் தற்போது  மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கையை  தான் இட்லி கடை படமாக எடுத்துள்ளார் தனுஷ் என்று  நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர். 

மாதம்பட்டி ரங்கராஜ்  பிரபல சமையல் கலைஞராக திகழ்ந்து வருகின்றார்.  தற்போது அவரையும் இட்லி கடை படத்தையும்  வைத்து  நெட்டிசன்கள்  கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement