• Jan 18 2025

மணி எனக்கு அண்ணா மாதிரி அவரால தான் இந்த வாய்ப்பே கிடைக்குது- பொசுக்குன்னு இப்பிடி சொல்லிட்டாரே- ரவீனா சொன்ன அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் ரவீனா.இருப்பினும் இவரைப் பிரபல்யப்படுத்தியது விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌனராகம் என்னும் சீரியலில் நாயகியாக நடித்து ரசிகர் மத்தியில் பிரபல்யமானார்.

அத்தோடு குக்வித்கோமாளி நிகழ்ச்சியிலு் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய சிரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.. ஒருபக்கம், சினிமாவில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஜில்லா, புலி, கதை சொல்ல போறோம், ராட்சசன், எனிமி, டீமன் ஆகிய படங்களில் நடித்தார்.


இப்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். அந்த வீட்டில் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்து வருகிறார். இந்த சீசனில் இவருடன் போட்டியாளராக டான்சர் மணியும் கலந்து கொண்டுள்ளார்.

இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் நேரம் செலவழித்து வருகின்றனர்.அத்தோடுஇருவரும் காதலிக்கிறார்கள் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் மணி ரவீனாவைக் காதலிப்பதை ஒரு எப்பிஷோட்டில் தெரிவித்தும் இருந்தார்.


இந்த நிலையில் ரவீனா பிக்பாஸிற்குச் செல்ல முதல் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.அதில் மணி எனக்கு அண்ணா மாதிரி அவரால் தான் டான்ஸ் ஷோக்களில் நான் டான்ஸ் ஆடுவதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றது.டான்ஸும் சொல்லித் தருகின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement