அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்கள் வெளியாவதற்கு தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனாலும் அதிக எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இடியாய் வந்த தகவல் விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்று..
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கின்றார். மேலும் இந்த படத்தில் அர்ஜுன், ரெஜினா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றார்கள்.
d_i_a
இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட போதும், இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும் குட் பேட் அக்லி திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளன. எனினும் இது தொடர்பான அதிகார்வ பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஏற்கனவே விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாவிட்டாலும் தை மாதத்தின் இறுதிப் பகுதியில் அல்லது பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் ரிலீஸாகும் என கூறப்பட்டது.
இவ்வாறான நிலையிலே தற்போது விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!