• Sep 11 2025

மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம்...! வைரலாகும் லிப் லாக் வீடியோ..!

Roshika / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல சமையல் நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீண்டும் திருமணம் செய்துள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ் சினிமா மற்றும் 'Cook with Comali' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரங்கராஜ், தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் இரண்டு குழந்தைகள் கொண்டுள்ளார்.


இந்நிலையில், ரங்கராஜ் ஃபேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துள்ளார். ஜாய் தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கிய ஆடை வடிவமைப்பாளராக அறியப்படுகிறார். அவர்கள் திருமண புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டன.


தற்போது, ஜாய் கிரிஸ்ல்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரொமாண்டிக் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதில் ரங்கராஜுடன் லிப் லாக் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னணியில் "எனக்காக பிறந்தாயே எனதழகி" என்ற பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை தனது கணவர் ரங்கராஜ் எடிட் செய்ததாகவும் ஜாய் தெரிவித்துள்ளார்.


இந்த வீடியோ வெளியானவுடன் நெட்டிசன்கள் மத்தியில் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருமணம் செய்த உடனே ஜாய் 6 மாத கர்ப்பமாக இருப்பது குறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதும் கூட சமூக வலைத்தளங்களில் விவாதத்தை உருவாக்கியுள்ளது.




Advertisement

Advertisement