• Aug 19 2025

உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்...! பாலாவுக்கு அண்ணனாக நின்ற விஜய பிரபாகரன்...!

Roshika / 2 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் "கலக்கப்போவது யாரு சீசன் 6" டைட்டில் வின்னராக வலம் வந்து, தனது தனித்துவமான பன்ச் டயலாக்குகளால் ரசிகர்களை மகிழ்வித்தவர் பாலா, இன்று தமிழக மக்களின் மனங்களில் நிழலாக நிறைந்துள்ளார். இவர் பேசிய எதை வேண்டுமானாலும் காமெடியாக மாற்றும் திறமையால் பல நிகழ்ச்சிகளில் இடம்பிடித்து, ஒரு கட்டத்தில் விஜய் டிவியின் முகமாகவே பரவலாகக் காணப்பட்டார்.


தொடர்ந்து கிடைத்த திரைப்பட வாய்ப்புகளில் காமெடி வேடங்களாக முத்திரை பதித்து வந்த பாலா, தற்போது "காந்தி கண்ணாடி" என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இது அவரது சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக இருக்கலாம்.

தனது சினிமா மற்றும் டிவி வாழ்க்கையில் சம்பாதிக்கும் பணத்தை தனது சொந்த வாழ்க்கைக்காக மட்டுமல்லாமல், சமூக சேவைக்கும் பயன்படுத்தும் பாலா, பலருக்கே முன்னுதாரணமாக உள்ளார். புயல், மழை போன்ற இயற்கை பேரழிவுகளில் மக்கள் பாதிக்கப்படும்போது, தனது அக்கவுண்டில் உள்ள பணத்தை முழுவதுமாக செலவழித்து உதவ முன்வருகிறார். இவரது மனிதநேயத்தை பார்த்து நடிகர் ராகவா லாரன்ஸ் கூட கவரப்பட்டு, இருவரும் இணைந்து சமூக சேவையில் ஈடுபட்டுவருகின்றனர்.


பாலாவை நேரில் சந்தித்த லாரன்ஸ், அவரிடம் “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்ட போது, பாலா “அண்ணா, நான் ஹீரோவாக வேண்டும்” எனக் கூறியுள்ளார். இதற்குப் பெரிதும் மகிழ்ந்த லாரன்ஸ், விரைவில் தனது தயாரிப்பில் பாலாவை ஹீரோவாக நடிக்கவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், தேமுதிக இளைஞரணி பொதுச் செயலாளரும் கேப்டன் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரன், பாலாவிற்கு தன்னாலான உதவிகளை செய்யத் தயார் என தெரிவித்துள்ளார். “பாலா பிரதரின் வீடியோக்கள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். அவருடைய சேவையைப் பார்த்து மிகவும் ஈர்த்துக்கொள்கிறேன். தேவையான எந்த உதவியும் கேளுங்கள், நான் ஒரு அண்ணனாக உங்களோடு இருப்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement