• Oct 01 2025

ஹ்ரித்திக் ரோஷன்-ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணியில் வார் 2..!உலகளாவிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு திரையுலகத்தின் இளைய பிரபலமான நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த 'வார் 2' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அயன் முகர்ஜி இயக்கிய இந்தப் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது.


முன்னதாக வெளியான 'வார்' படத்தின் தொடராக வந்த 'வார் 2' மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. எதிர்பார்த்த அளவுக்கு விமர்சன ரீதியாக ஓரளவு பின்னடைவும் இருந்தபோதிலும், வசூல் ரீதியாக படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படக்குழு வெளியிட்ட தகவலின்படி, ‘வார் 2’ உலகளவில் இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 240 கோடி ரூபாய், ஓவர்சீஸ் (வெளிநாடுகளில்) 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தில் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் கவர்ச்சியான தோற்றத்துடன் நடித்துள்ளார். அதிரடி சண்டை காட்சிகள், ஒளிப்பதிவும், விறுவிறுப்பான திரைக்கதையும் ரசிகர்களை திரையில் கட்டிப் போட முயற்சிக்கின்றன.


Advertisement

Advertisement