தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தில் வெங்கட் பிரபுவின் ’மாநாடு’ உள்பட சில படங்களில் நடித்த நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த நடிகையை வெங்கட் பிரபு விடவே மாட்டாரா என கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. 
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா உள்ளிட்ட நடிகைகள் நடித்து இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக இந்த படத்தில் அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ’சென்னை 600028’ ’மாநாடு’ ’மன்மதலீலை’ ஆகிய வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் ’கோட்’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து நடிகை அஞ்சனா கீர்த்தியை வெங்கட் பிரபு விடவே மாட்டாரா? எல்லா படத்திலும் பயன்படுத்தி வருகிறார்’ என்று கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன. மற்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் அஞ்சனா கீர்த்தியை வெங்கட் பிரபு நடிக்க வைத்திருந்த நிலையில் ’கோட்’ படத்தில் சற்று அதிகமான காட்சிகள் இருக்கும் கேரக்டரில் நடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!