பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவரும் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் இன்றைய தினம் சௌந்தர்யாவின் நண்பரான விஷ்ணு நுழைந்திருந்தார். அவருக்கு எதிர்பாராத விதத்தில் மிகப்பெரிய சப்ரைஸ் கொடுத்திருந்தார் சௌந்தர்யா.
இதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னரும் நடிகையுமான அர்ச்சனா மாஸாக என்ட்ரி கொடுத்திருந்தார். அருணும் அர்ச்சனாவும் காதலிக்கின்றார்கள் என்று தகவல்கள் பரவி வந்தது. அவற்றை உறுதி செய்யும் வகையிலேயே அருண் அர்ச்சனாவை சக போட்டியாளர்களும் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
மேலும் பிக்பாஸில் நுழைந்த அர்ச்சனா, நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே இரு.. என்று தன்னால் முடிந்த அட்வைஸை அருணுக்கு சொல்லி உள்ளார். அத்துடன் சக போட்டியாளர்களுடன் பாட்டு பாடி அவர்களையும் கலகலப்பாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா அருளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கவர்ந்து வருகின்றன. அர்ச்சனாவை பார்த்ததும் அருண் மிகப்பெரிய சந்தோஷத்தில் அவரை கட்டித் தழுவிய காட்சிகளும் வைரலாகிய வருகின்றன. இதோ இணையத்தைக் கவர்ந்த போட்டோ..,
Listen News!