• Dec 28 2024

என்ன படம் எடுத்திருக்க..? பப்ளிக்கில் இயக்குநரை சாட்டையால் அடித்த கூல் சுரேஷ்!

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் எளிய மனிதர்களின் வாழ்வை அறம் என்ற மையக்கதை களத்தை கொண்டு உருவாக்கியுள்ள படமே திரு. மாணிக்கம். இந்த படம் இன்றைய தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்த படத்தில், இரண்டு பிள்ளைகளுடன் கேரளாவில் வசித்து வரும் சமுத்திரக்கனி அங்கு லாட்டரி சீட்டு விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளார். இவருக்கு குடும்ப பிரச்சினை, கடன் சுமை என பல பிரச்சினைகள் இருந்தாலும் நேர்மையாக வாழ்ந்து வருகின்றார்.

ஒருநாள் இவருடைய கடைக்கு பாரதிராஜா வருகின்றார். அவருக்கு ஏகப்பட்ட கடன் சுமை காணப்படுகின்றது. இதில் பணம் கிடைத்தால் அத்தனையும் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு லாட்டரி சீட்டு வாங்குகின்றார். ஆனால் அவரிடம் இருந்த காசு தொலைந்து போகின்றது. அந்த சீட்டை எடுத்து வைக்கும் படி கூறுகின்றார்.

இறுதியில் அந்த சீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பணம் கிடைக்கின்றது. இதனால் அந்த சீட்டை பாரதிராஜாவிடம் கொடுப்பதற்கு சமுத்திரக்கனி புறப்படுகின்றார். ஆனாலும் அவருடைய மனைவியும் உறவினர்களும் அந்தப் பணத்தை நாமே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லுகின்றார்கள்.


இறுதியில் நேர்மையோடு புறப்படும் சமுத்திரக்கனி பாரதிராஜாவை சந்தித்தாரா? பணத்தை கொடுத்தாரா? அவருடைய நேர்மைக்கு கிடைத்த பலன் என்ன? என்பவற்றுக்கு விடை அளிக்கும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது

இந்த நிலையில், திரு. மாணிக்கம் படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் கூல் சுரேஷ்  தன்னைத் தானே சாட்டையால் அடித்துக் கொண்டு திரு மணிக்கம் படத்தின் பெயரை சொல்லி நடுரோட்டில் நின்று சத்தமிடுகிறார். 


கூல் சுரேஷ் இவ்வாறு செய்வது பலருக்கு வேடிக்கையாக இருந்தாலும் அவர் வழமையாகவே படங்களை ப்ரொமோஷன் பண்ணும் வகையில் வித்தியாசமாக எதையாவது செய்ய முயற்சி செய்வார்.

இதன்போது அங்கு வந்த இயக்குநரை என்ன படம் எடுத்து வைத்திருக்கிறீர்கள்? என்று அவரையும் சாட்டையால் அடித்துள்ளார். 

அதன் பின்பு உண்மையாகவே  இந்த சாட்டை அடி படம் பார்ப்பவர்களுக்கு தெரியும். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை திரு மாணிக்கத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நந்தா என்று தனது வாழ்த்துக்களை இயக்குநருக்கு தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement