• Feb 05 2025

புது ஸ்டைலில் ஹன்சிகா எடுத்துக் கொண்ட போட்டோ ஷுட்.. ஜொள்ளு விடும் இளசுகள்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் ஹன்சிகா மோத்வானி. அதன் பின்பு ஒரு காலகட்டத்தில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு  கொடிகட்டி பறந்த நடிகையாக காணப்பட்டார்.

எங்கேயும் காதல் என்ற படத்தின் மூலம் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்பு விஜய் உடன் புலி, வேலாயுதம், தனுசு உடன் மாப்பிள்ளை, சூர்யாவின் சிங்கம் 2 என பல ஹிட் படங்களை கொடுத்து தனக்கெனவே தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இதைத் தொடர்ந்து ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கவே 2022 ஆம் ஆண்டு அவரின் நெருங்கிய நண்பரான சோஹைல் கதுரியா திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம் பலரும் பிரமிக்கும் வகையில் மிகப் பழமையான வரலாற்று அம்சம் கொண்ட கோயிலில் நடைபெற்றது.


சமீபத்தில் இவர் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக காணப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய ஆடை பலரையும் கவரும் வகையில் காணப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement