• Jul 12 2025

அமைதியை தேடிச்சென்ற கீர்த்தி சுரேஷ்… என்ன செஞ்சாருனு பாருங்களேன்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தன்னுடைய எளிமையான நடிப்பாலும், இயற்கையான அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்த இவர், தற்போது சமூக வலைத்தளங்களில் புதிய போட்டோஷூட் படங்களை வெளியிட்டுள்ளார்.


இந்த போட்டோஷூட்டில், கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் போஸ்களில் ஸ்டைலாகவும், ஸ்போர்டிவாகவும்  முற்றிலும் புதிய ஒரு அவதாரத்தில் காட்சியளித்துள்ளார். இதுவரை, கீர்த்தி வெளியிட்ட புகைப்படங்களுடன் சமீபத்திய போட்டோஸினை ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த ஸ்டைலும், அழகும் மாறுபட்ட புதிய முகத்தை வெளிப்படுத்துகின்றன.


இந்த போட்டோஷூட்டின் முக்கிய விசேஷம் என்னவெனில், பிட்னஸ் மற்றும் பேஷன் இரண்டும் ஒரே நேரத்தில் கொண்டாடப்படுகின்றது.  இந்த புகைப்படங்களை கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டவுடன், ரசிகர்கள் அனைவரும் அதனை ஷேர் செய்துகொண்டனர்.

Advertisement

Advertisement