• Apr 02 2025

முதல் முறையாக மனைவி பற்றி பேசிய லோகேஷ்! ஆனாலும் இப்படி சொல்லிட்டாரே..!!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, கமல், சூர்யா என அனைவரையும் வைத்து படம் இயக்கிய லோகேஷ், தற்போது தானே கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இயக்கத்தில், ஸ்ருதிஹாசன் இசையமைத்த 'இனிமேல்' என்ற பாடலில் ஹீரோவாக எண்ட்ரியாகி, அதன் பாடலும் ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் வெளியானது.

'இனிமேல்' பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதி மற்றும் லோகேஷ் கனகராஜ்விழாவின் பின்னர்  பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளனர்.


இந்த நிலையில், லோகேஷிடம் செய்தியாளர்கள் நீங்கள் நடித்ததை பார்த்து உங்கள் மனைவி என்ன சொன்னார்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த லோகேஷ், ஆரம்பத்திலிருந்து நான் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளை தவிர்த்து வருகிறேன். அதை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை. சினிமாவுக்கு வந்ததிலிருந்து எனக்கும் உங்களுக்குமான தொடர்பு மட்டும்  நீடித்தால் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பொதுவில் கொண்டு வர விரும்புவதில்லை என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement