• Jul 27 2024

'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் சிங்கிள் எப்படி? அடிச்சு துவச்சு கிழிஞ்சதா ஜரகண்டி பாடல்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான ராம் சரண் நடிப்பில், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் தான் கேம் சேஞ்சர். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே சூர்யாவும் நடித்துள்ளார்.

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை தொடர்ந்து, இயக்குனர் சங்கர் ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஆயிரம் ஸ்டாண்ட் கலைஞர்கள் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

கேம் சேஞ்சர் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் தான் தமன் முதன்முதலாக நடிகராக அறிமுகம் ஆனார். இந்த படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான  தில் ராஜூ தயாரிக்கிறார்.


இந்த நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் ‘ஜரகண்டி’ என்ற பாடலை தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டு உள்ளது.

தமிழில் விவேக் எழுதிய பாடல் வரிகளில் டேல் மெந்தி, பூஜா வெங்கட் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி ஆடிய நடனம் தற்போது சமூக வலைத்தளங்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement