• Jan 18 2025

ஹாலிவுட்டில் இந்த படமாச்சும் பயம் காட்டுமா? அரண்மனை 4 பற்றி சுந்தர். சி கொடுத்த ஹாட் அப்டேட்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

2014 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் அரண்மனை. இதன் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 2ம், 3ம் பாகம் வெளியானது.

இதை தொடர்ந்து வரவிருக்கும் அரண்மனை நான்காம் பாகத்தில் சந்தோஷ், தமன்னா, ராஷி கன்னா, சந்தானம், ஜோகி பாபு ,மொட்டை ராஜேந்திரன்,கோவை சரளா போன்ற பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். தமிழ் சினிமாவில் முதல் முறையாக நான்காம் பாகத்தை கடந்து வெளியாக இருக்கும் திரைப்படமும் இதுவே ஆகும். 


இந்த நிலையில், இன்றைய தினம் அரண்மணை படத்தின் நான்காம் பாகம்  எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.


எனவே, முதல் மூன்று பாகங்கள் போலவே இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் வகையில் உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement