• Jan 19 2025

பழம்பெரும் நடிகை புற்று நோயால் உயிரிழப்பு..! பிரபலங்கள் பலரும் அஞ்சலி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

1960 ஆம் ஆண்டு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நாடக கலைஞர் ஆன கவியூர் பொன்னம்மா. இவர் நடிக்க  ஆரம்பத்தில் இருந்து சித்தி, அம்மா மற்றும் பாட்டி கேரக்டரில் நடித்து பிரபலமானார். இவர் கேரளா அரசின் சிறந்த துணை நடிகைக்கான விருதை நான்கு முறை வென்றுள்ளார்.

மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் கமலஹாசன் நடித்த சத்யா படத்தில் அமலாவின் சேச்சையாக நடித்தார். சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நடிகை கவியூர் பொன்னம்மாவின் கணவர் இறந்துவிட்ட காரணத்தினால் அவருடைய தம்பியுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு புற்றுநோய் இருப்பது மே மாதத்தில் கண்டறியப்பட்டது. புற்றுநோய் நான்காவது நிலைக்கு வந்து விட்டதால் அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .


இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரை துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது பலரும் இவருடைய மறைவுக்கு இரங்களை தெரிவித்து வருகின்றார்கள்.

அவரது உடல் பொதுமக்கள், திரைப்பிரபலங்களின் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு, இறுதிச்சடங்கு இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும் என்றும் பின் அவரது வீட்டில் தகனம் செய்யப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement