• Oct 13 2024

சகுனிகள் இருக்கும் சமூகத்தில் பிழைக்க முடியாது..? ரஜினி அதிரடி பேச்சு

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை இயக்கியவர் தான் த.சே ஞானவேல். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய படம் தான் வேட்டையன். இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீசாக உள்ளது. இதனை முன்னிட்டு நேற்றைய தினம் பிரம்மாண்டமாக படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

வேட்டையின் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் பகத் பாசில், ரித்திகா சிங், ரானா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமாரி, மும்பை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்தது.

ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இந்த படத்தில் இருந்து டீசர், போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான மனசிலாயோ பாடல் பட்டித் தொட்டியெங்கும் பேமஸ் ஆனது.


இந்த நிலையில், வேட்டையன் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற போது அவர் பல விஷயங்களை பேசி உள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், சகுனிகள் இருக்கின்ற இந்த சமூகத்தில் நல்லவனாக இருந்தால் பிழைக்க முடியாது. கொஞ்சம் சாணக்கியத்தனமும் சாமர்த்தியமும் வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் ரஜினி யாரை  சொல்கின்றார்? தனது தனிப்பட்ட பிரச்சினையை மையப்படுத்தி சொல்கின்றாரா? இல்லை சினிமாவில் அவருக்கு பிரச்சினை ஏற்படுத்துவர்களை பற்றி சொல்கின்றாரா? என்று கேள்வி வருகின்றார்கள்.

Advertisement