• Dec 04 2024

சோபிதாவுடன் திருமணமா! நாக சைதன்யாவிற்கு சமந்தா அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்...

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிந்த பிறகு நாக சைதன்யா சோபிதாவுடன் நிச்சியதார்த்தம் செய்துகொண்டார். இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன்பு ஒரு பிளாட் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். அதை தங்கள் விருப்பப்படி வடிவமைத்து திருமணத்திற்கு பிறகு அங்கே குடியேறினார்கள். 

d_i_a

விவாகரத்து அறிவிப்பு வெளியாகும் போது இருவரும் அந்த அப்பார்ட்மெண்ட்டை காலி செய்து விட்டார்கள். இந்த நிலையில் சோபிதா உடனான திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருந்தாலும் சமந்தாவுடன் வாழ்ந்த அந்த அப்பார்ட்மெண்டில் வாழ சோபிதாவுக்கு விருப்பம் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. 


அதே மாதிரி அந்த அப்பார்ட்மெண்ட் வாங்க மற்றும் அடுத்தடுத்த செலவுகளில் அதிகம் பணம் செலவழித்தது சமந்தா என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பார்ட்மெண்ட் செலவில் தன்னுடைய பங்கை திருப்பித் தருமாறு சமந்தா நாக சைதன்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 

Advertisement

Advertisement