• Dec 04 2024

அட்ராசக்க...! 2 பாட்டு அடிச்ச லக்கு! LCU வில் இணையும் ட்ரெண்டிங் பாடகர்...

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

பாடகர் சாய் அபயங்கர் தனது முதல் முயற்சியான 'கட்சி சேரா' மற்றும் 'ஆச கூட' ஆகிய சுயாதீன டிரெண்டிங் பாடல்கள் மூலம் ஒரே இரவில் ட்ரெண்டிங் ஆகிவிட்டார். லோகேஷ் கனகராஜ் எழுத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'பென்ஸ்' திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் இசையமைப்பாளர் என்ற பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.


சாய் அபயங்கர் கூறுகையில், “இதை விட சிறந்த அறிமுகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. இந்தத் தருணத்தில் உற்சாகமும் பொறுப்புகளும் எனக்கு அதிகமாகியிருக்கிறது. இந்த சிறப்பான வாய்ப்பை வழங்கிய பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் சார், லோகேஷ் கனகராஜ் சார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி சார் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

d_i_a


ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் 'பென்ஸ்' போன்ற படத்திற்கு இசையமைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. லோகேஷ் கனகராஜின் படங்களுக்கு நான் ரசிகன். அவரின் யுனிவர்சில் இசையை உருவாக்குவது எனக்கு உண்மையிலேயே பெரிய கனவு என்று கூறியுள்ளார். அது தொடர்பான விடியோவும் இணையத்தில் வைரலாகிறது.


Advertisement

Advertisement