• Dec 12 2025

அஞ்சான் படம் நல்லா ஓடிருந்தா எங்களோட லைஃப் மாறி இருக்கும்.! லிங்குசாமி ஓபன் டாக்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

லிங்குசாமி - சூர்யா கூட்டணியில்  வெளியான திரைப்படம் தான் அஞ்சான். இந்த படம் தற்போது மீண்டும் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. 2014 ஆம் ஆண்டு அஞ்சான் படம் வெளியான போது அதிகப்படியான ட்ரோல்களில் சிக்கியது. இதனால் அதன் இயக்குநர் லிங்குசாமி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.

எனினும் சமீபத்தில் வழங்கிய பேட்டியில், அஞ்சான் படம் சூர்யா ரசிகர்களுக்கு பிடித்திருந்ததாகவும்,  குட்டி பசங்களுக்கு பிடித்ததாக அவர்களுடைய பெற்றோர்கள் தெரிவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.  அந்த படத்தில் சூர்யாவின் லுக், பாடல்கள் என்பவை அவருடைய ரசிகர்களை கவர்ந்தது. 

இம்முறை அஞ்சான் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெரும் என்ற நம்பிக்கையோடு ரீ எடிட்  செய்து இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளனர்.  தற்போது இந்த படத்திற்கு திரையில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகின்றது. 

இந்த நிலையில்,  இயக்குநர் லிங்குசாமி அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் கூறுகையில்,  அஞ்சான் படம் ரிலீசான போது  அதன் கலெக்ஷன் பீக்கில் இருந்தது.  ஆனால் அதை முறியடிப்பதற்கு  சில கூட்டம் இருந்தது. 


ரஜினிக்கு பிறகு சூர்யாவின் அஞ்சான் படத்திற்கு தான் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அந்த டைம் அது அப்படியே போயிருந்தால் சூர்யாவின் லைஃப்பும் மாறி இருக்கும் என்னுடைய லைஃப்பும் மாறி இருக்கும்.

ஆனால் அதற்கு பின்பு  சதி நடந்தது. அதனால் தான் அந்த படம் தோல்வியை சந்தித்தது. அஞ்சான் படத்தில் எதிரி கூட இருக்கலாம் துரோகி இருக்கக் கூடாது என்ற வசனமும் அதற்குத் தான்.

ஆனாலும் அதற்குப் பிறகு அந்த படத்தை எடிட் பண்ணிய பையன் எங்கிருந்து வந்தவன், அவனுக்கு பின்னால்  என்ன யார் இருக்காங்க என்ற விஷயம் தெரிந்தது.  அந்த சம்பவத்தின் பிறகுதான் பலரும் உஷாரானார்கள்  என்று தெரிவித்தார். 


 

Advertisement

Advertisement