• Jan 19 2025

நடிகர் சங்க கட்டிட நிதிக்கு லட்சமா? கோடியா? கமல்ஹாசன் வழங்கிய செக்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட அளவு பணிகள் முடிந்தபின், போதிய அளவு நிதி இல்லாத காரணத்தினால் கட்டிட பணிகள் நிறுத்தப்பட்டது.

இதனால் தலைவர் நாசர் மற்றும் பொதுச்செயலாளர் விஷால் தலைமையிலான புதிய அணி, நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் 40 கோடி தேவை என்று கோரிக்கை விடுத்தது.

அதன்படி, இந்த தொகையை வங்கியில் கடன் வாங்கி நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டது. ஆனாலும் தற்போது நிதி பற்றாக்குறை சமாளிக்க தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகர்களிடம் நடிகர் சங்கம் சார்பில் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது.


அதன்படி நடிகரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சங்கத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியாக கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகரும் மக்கள் நிதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.

தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் நடிகர் சங்க கட்டிட பணியை தொடர்வதற்காக ஒரு கோடிக்கான காசோலையை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி உள்ளார் கமல்ஹாசன்.

Advertisement

Advertisement