சின்னத்திரையில் 'அன்பே சிவம்', 'நாம் இருவர் நமக்கு இருவர்' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை தீபா.
இவருக்கு முதல் திருமணம் நடந்து ஒரு மகனும் உள்ளார். ஆனால் சில காரணங்களின் அடிப்படையில் முதல் கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

அதன் பின் கணேஷ் பாபு என்பவரை காதலித்து சில எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்கள் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு அவர் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அதாவது, தற்போது கணேஷ் பாபுவை பிரிந்து அவர் வாழ்வதால் அவருடன் மீண்டும் சேர்த்து வைக்கக் கோரி சின்னத்திரை நடிகை தீபா, வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அத்துடன் கணேஷ் பாபுவின் குடும்பத்தினர் தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டையும் வைத்துள்ளார்.
                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!