• Jan 19 2025

பிருத்விராஜ் மேலே அமலாபால்.. ரிலீஸான ஆடுஜீவிதம் டிரெய்லர்! இதுக்கு ஆஸ்கர் அவொட் கன்போர்ம்!

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் பிருத்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள 'ஆடுஜீவிதம்' படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

பிளெஸ்ஸி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டிரெய்லரை, ஏ.ஆர் ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

'ஆடுஜீவிதம்'  படத்தின் கதைக்களம், வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும்  பிருத்விராஜ், தனது மனைவி அமலாபாலை  பிரிந்து பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் அவஸ்தை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.


இந்தப் படத்திற்காக உடல் மெலிந்து ஓடாகத்தேய்ந்து தன்னை வருத்தி இதுவரை இல்லாத அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்துள்ளார்  பிருத்விராஜ். இந்த படத்துக்கு அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது வெளியான 'ஆடுஜீவிதம்' படத்தின்  டிரெய்லர் முழுவதும் மண்புழுதி நிறைந்த மரியான் படத்தில் தனுஷ் இருப்பது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது. 


ஆட்டு மந்தைகளுடன் அழுக்கு படர்ந்த சட்டையுடன் அகோரி போல தோற்றம் அளிக்கும் பிருத்விராஜ், கண்களுக்கு குளிர்ச்சியாக அமலாபால் வரும் காட்சிகள் மட்டுமே வர்ணித்து காட்டப்பட்டுள்ளது.

இந்த படம் எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை மிகவும் வலிமையான ஒன்றாக காணப்படுவதால் அடுத்த ஆண்டு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement