• Apr 02 2025

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சிக்ஸர் அடிக்கும் குடும்பஸ்தன்.! நான்கு நாட்களில் இத்தனை கோடியா?

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் குடும்பஸ்தன். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சாந்தி மேகனா, சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

பொதுவாகவே தனக்கேற்ற தனித்துவமான நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து வருகின்றார் மணிகண்டன்.அதேபோல குடும்பத்தார் திரைப்படமும் நல்ல கதை அம்சம் கொண்டதாக காணப்படுகிறது. 

குடும்பத்தில் மனைவி, அம்மா அப்பாவின் தேவைக்காக பணம் தேடி ஓடுவது, குடும்ப பாரத்தை சுமக்க முடியாமல் திண்டாடுவது, அதற்காக தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வது என எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி உள்ளார் மணிகண்டன்.


மேலும் நடுத்தர வர்க்கத்தில் உள்ள குடும்பத்தில் என்னென்ன பிரச்சனை ஏற்படுகின்றது. அவர்கள் பணத்திற்காக எவற்றை எல்லாம் சந்திக்கிறார்கள் என்பவற்றை இயக்குனர் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார். 

இந்தப் படத்தில் காமெடி, சென்டிமென்ட் என போர் அடிக்காமல் இருப்பதாகவும் படத்தைப் பார்த்தவர்கள் நல்ல கமெண்ட்ஸ்களை கொடுத்து வருகின்றார்கள்.


இந்த நிலையில் குடும்பஸ்தன் படத்தின் நான்கு நாட்களுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளில் ஒரு கோடியும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதனால் படத்தின் வசூல் 3.3 கோடியாகவும் நேற்றைய தினம் ஒரு கோடியையும் வசூலித்து உள்ளது.

அதன்படி குடும்பஸ்தன் படத்தின் மொத்த வசூல் உலகளவில் சுமார் 7 .5 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகின்றது. எனவே இனிவரும் நாட்களில் குடும்பஸ்தன் படத்திற்கான வசூல் எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement