• Sep 08 2025

ரோகிணி கண்ணில் விரல் விட்டு ஆட்டும் க்ரிஷ்.. அதிரடியான திருப்பத்தில் சிறகடிக்க ஆசை

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில்,  க்ரிஷ்  மீனாவின் அம்மா வீட்டில் இருக்கின்றார்.  அவருக்கு மீனாவின் அம்மா சோறு ஊட்டி விடுகின்றார். இதன் போது சத்யா உன்னோட அம்மா துபாயில் இருந்து வரும் போது உனக்கு என்ன வாங்கி வருவாங்க? என்று கேட்க, 

தனக்கு சிப்ஸ், கடலை மிட்டாய் வாங்கி வருவதாக சொல்லுகின்றார். அப்படியானால் உனக்கு பேரிச்சம் பழம் வாங்கி வரவில்லையா? என்று கேட்கின்றார் சத்யா.  அதற்கு அப்படி என்றால் என்ன என்றே தெரியாது என  க்ரிஷ் சொல்லுகின்றார். 

இதை தொடர்ந்து முத்துவும் மீனாவும்  க்ரிஷை ஸ்கூலில் விடப் போகின்றார்கள் .  மேலும் ஆசிரியரிடம் க்ரிஷை நாங்களே கொண்டுவந்து கூட்டிப் போய் விடுகின்றோம், அவன் எங்களுடனே இருக்கட்டும் என்று சொல்ல, அதனை அவருடைய கார்டியன் தான்  உறுதி செய்ய வேண்டும். தான் அவருடன் கதைத்து விட்டு சொல்வதாக ஆசிரியர் சொல்லுகின்றார். 

முத்துவும் மீனாவும் கிளம்பிச் சென்ற பின் அங்கு ரோகிணியும்   மகேஷும் வருகின்றார்கள்.  மேலும்  ஆசிரியர் முத்து சொன்ன விடயங்களை சொல்ல, தான் க்ரிஷின் அம்மாவுடன் கதைத்துவிட்டு சொல்வதாக மகேஷ் சொல்கின்றார். 


அதன் பின்பு க்ரிஷ் ரோகிணியை பார்க்க வந்ததும்  ரோகிணி உடனே அவரை அடிக்க  கை ஓங்குகின்றார். மேலும் நான் சொன்னதை ஏன் கேட்கவில்லை? எதற்காக மீனா வீட்டுக்குச் போனா? என்று திட்டுகின்றார்.  அத்துடன் இனிமேல் நீ மகேஷ் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று சொல்ல, நான் அங்கு இருக்க மாட்டேன் என்று க்ரிஷ் அடம் பிடிக்கிறார். 

இதனால் நீ போகவில்லை என்றால் நான் எங்கையாவது சென்று விடுவேன் என்று ரோகிணி மிரட்ட, அப்படி என்றால் நானும் எங்கேயாவது சென்று விடுகின்றேன் என்று  க்ரிஷ்  ரோகினியை மிரட்டுகின்றார். 

அதன் பின்பு   நீ என்னை வந்து கூட்டிச் செல்லும் வரை நான் மீனா வீட்டில் தான் இருப்பேன் என்று சொல்லிவிட்டு ஓடி சென்று விடுகின்றார்.  இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ரோகிணி குழப்பமாக இருக்கின்றார். 

இறுதியில் மீனா சீதாவிடம் நடந்தவற்றை சொல்ல, சீதா க்ரிஷ்க்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்  என்று சொல்லுகின்றார். தான் டாக்டரிடம் அப்பாயின்மென்ட் எடுக்கிறேன். நீ அவனை அழைத்து வா என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement