தமிழ்நாட்டில் பல பிரபலங்களின் திருமணத்திற்கு கேட்டரிங் சர்வீஸ் செய்து அசத்தி வருபவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் பென்குயின் என்ற படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் மூன்றாவது படத்திற்கான பூஜை ஆரம்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகின்றார்.
மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பின்பு காஸ்டியூம் டிசைனர் ஆன ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாக திருமணம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
எனினும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தனது கருவை கலைக்க சொன்னதாகவும் சர்ச்சை ஒன்றை ஏற்படுத்தி இருந்தார் ஜாய் கிரிசில்டா. அதன் பின்பு ரங்கராஜ் தனக்கு அனுப்பிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் அவர் ஆசை வார்த்தைகள் கூறி இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த பேட்டியில், எனக்கு ரங்கராஜை கல்யாணம் பண்ணனும் என்று ஆசையே இல்லை.. ஆனால் அவர்தான் உன்ன கல்யாணம் பண்ணனும்.. உன் மூலமாக பெண் குழந்தை வேணும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே ரொம்ப ஆசைப்பட்டார்.. 2024 ம் ஆண்டு ஏற்கனவே எங்களுடைய முதல் குழந்தை கலைந்து விட்டது. ஆனாலும் அவருக்காக தான் இப்போவும் இந்த குழந்தை வயிற்றில் சுமக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!