• Jan 18 2025

பெட்ரோல் பங்கில் தண்ணீர் பாட்டில் விற்ற சிறுவன்.. கேபிஒய் பாலா சந்திப்பால் ஏற்பட்ட திருப்பம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பெட்ரோல் பங்கில் தண்ணீர் பாட்டில் விற்ற சிறுவன் தற்செயலாக கேபிஒய்  பாலாவை சந்தித்ததை அடுத்து அந்த சிறுவனின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா பலருக்கு தன்னலமின்றி உதவி செய்து வருகிறார் என்பதும் கடந்த சில மாதங்களாக அவர் நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

கேபிஒய் பாலாவின் உதவிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் ஒரு சிலர் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.ஆனால் அந்த விமர்சனத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் பாலா அவ்வப்போது உதவி செய்து வருகிறார் என்பதும் அது குறித்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் கேபிஒய் பாலா காரில் சென்ற போது பெட்ரோல் போடுவதற்காக பெட்ரோல் பங்க் சென்றார். அங்கு ஒரு சிறுவன் தண்ணீர் பாட்டில் விற்று கொண்டிருப்பதை பார்த்ததும் அந்த சிறுவனை காரில் ஏற்றி ’இனிமேல் நீ தண்ணீர் பாட்டில் விற்கக் கூடாது, நன்றாக படிக்கனும், என்று கூற ’எனக்கும் டாக்டருக்கு படிக்க ஆசை தான்’ என்று அந்த சிறுவன் கூறினார்.

உடனே அந்த சிறுவனை காரில் அவனுடைய வீட்டிற்கு அழைத்து சென்று சிறுவனின் அம்மாவிடம் ’இந்த பையன் படிப்பதற்கான முழு செலவையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், முதல் கட்டமாக இந்த பணத்தை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூற அந்த அம்மா ஆனந்த கண்ணீர் வடித்த காட்சி அந்த வீடியோவில் உள்ளன.

எவ்வளவு விமர்சனம் வந்தாலும் தொடர்ந்து நான் உதவி செய்து கொண்டிருப்பேன் என்ற மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் கேபிஒய் பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Advertisement

Advertisement