பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், நடிகர் கார்த்தி நடித்திருந்த திரைப்படம் ஜப்பான்'இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
நகை கடையின் சுவற்றியில் ஓட்டையை போட்டு, 200 கோடி நகையை ஆடையை போடும் கார்த்தி, அதை வைத்து கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று பெண்கள், நகை, சரக்கு என ஜமாய்க்கிறார். ஒரு பக்கம் இவரை போலீஸ் வலைவீசி தேட, போலீசிடம் சிக்கும் 'ஜப்பான்' எப்படி போலீசுக்கே தண்ணி காட்டி விட்டு எஸ்கேப் ஆகிறார்,
இவர் ஏன் திருடுகிறார், இதன் பின்னணி என்ன, என்பதே இந்த படத்தின் கதைக்களமாக இருக்கின்றது.முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு சற்று கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், ஜப்பான் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, கார்த்தியின் ஜப்பான் படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!