• Jan 20 2025

கார்த்திகை தீபம் சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை! இனி அவருக்கு பதில் யாரு தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனித்தனி மவுசு காணப்படுகின்றன. அதிலும் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றது.

சன் டிவி, விஜய் டிவி ஆகியவை தமக்கு இடையே உள்ள போட்டியில் புதிய புதிய சீரியல்களை களம் இறக்கி வருகின்றன. டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலை வகிக்கும் சீரியல்களை தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருவதோடு, டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை சந்திக்கும் சீரியல்களை சட்டென முடித்து சுபம் போட்டு விடுகின்றார்கள்.

அதேபோல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக காணப்படுகின்றது. இதில் நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் மிகவும் பிரபலம் அடைந்தவர்களாக காணப்படுகின்றார்கள்.

அதிலும் தற்போது மாரி, அண்ணா, நினைத்தேன் வந்தாய், கார்த்திகை தீபம் போன்ற சீரியல்கள் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதோடு டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னேறி வருகின்றன.


மேலும் கார்த்திகை தீபம் சீரியல் இவற்றுக்குள் முதலிடத்தில் காணப்படுகின்றது. அதற்கு காரணம் அந்த சீரியலில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின் தான்.

செம்பருத்தி சீரியலில் நடித்து புகழ்பெற்ற கார்த்திக் ராஜ் இதில் நாயகனாக நடிக்க, ஆர்த்திகா நாயகியாக நடிக்கின்றார். இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பின் உச்சத்தில் ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த நிலையில், கார்த்திகை தீபம் சீரியல் இருந்து நடிகை ஒருவரின் மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்த நடிகை இந்த தொடரில் இருந்து வெளியேற அவருக்கு பதிலாக நடிகை சாந்தினி நடிக்க கமிட்டாகியுள்ளார். இவரும் கூடுதலாக வில்லி கேரக்டரில் நடிப்பதால் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement