• Nov 05 2024

ஜோதிகாவின் உடை பற்றி பேசுவது முட்டாள் தனமானது! பிரபலம் கொடுத்த பதிலடி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பலரின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகை ஜோதிகா. இவர் பல ஹிட் படங்களை கொடுத்தார். அதன்பின்பு விஜய், சூர்யா, அஜித் என முன்னணி நடிகர்களுடனும் நடித்திருந்தார்.

பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அதில் நடித்த சூர்யா மீது அவருக்கு காதல் மலர்ந்தது. அதன் பின்பு இரு வீட்டாரும் சம்மதிக்கும் வரையில் காத்திருந்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு சினிமா துறையில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, தனது குடும்பம் இரண்டு பிள்ளைகள் என அவர்கள் மீது மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்தார். எனினும் ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வளர்ந்து விடவே 36 வயதினில் என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமா துறையில் கம்பேக் கொடுத்தார்.

அதன்பிறகு தனக்கேற்ற திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து வருகின்றார். தற்போது தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்களிலும் நடிக்க  கமிட்டாகி உள்ளார். அண்மையில் மாதவனுடன் இவர் நடித்த சைத்தான் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.


சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விழாவில் பங்கேற்ற  ஜோதிகாவின் உடை பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. பாரம்பரியமிக்க சிவக்குமாரின் குடும்பத்தில் இருந்து இப்படி ஒரு உடையுடன் பொதுவெளியில் தோன்றியது பெரும்  விமர்சனங்களை எழ வைத்தது.

இந்த நிலையில், ஜோதிகா கண்ணியமான வகையிலே உடை அணிந்து வந்ததாகவும் அவரது உடை குறித்து பேசுவது முட்டாள்தனம் என்றும் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

மேலும் அவரது உடையை ஊடுருவி பார்த்துவிட்டு சிலர் விமர்சனம் செய்வதாகவும் பாலிவுட்டில் ஏறக்குறைய அனைவருமே அரைகுறை ஆடையுடன் தான் பங்கேற்பார்கள் அவர்களுடன் ஒப்பிடும்போது ஜோதிகா 99 சதவீதம் சிறப்பாகவே ஆடை அணிந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement