• Mar 16 2025

'கராத்தே பாபு' ரவி மோகனின் 34வது படத்தின் டைட்டில், டீசர் ரிலீஸ்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

'ஜெயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரவி மோகன் நடிப்பில் தற்போது அவருடைய 34-வது திரைப்படம் தயாராகி வருகின்றது. இவர் தனக்கு ஏற்ற வகையில் வித்தியாசமான கதைகள் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். மேலும் இவருடைய நடிப்பில் ஜீனி திரைப்படம் உருவாகின்றது.

ரவி மோகன் நடிக்கும் 34 வது படத்திற்கு தற்காலிகமாக 'ஆர் எம் 34' என பெயரிடப்பட்டது. இந்த படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது. இதனை 'டாடா' பட இயக்குநர் ஆன கணேசன் பாபு இயக்குகின்றார். 

d_i_a

மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தவ்தி ஜிவால்  நடிப்பதோடு சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்.


இந்த நிலையில், ரவி மோகனின் 34 ஆவது படத்திற்கான டைட்டில் டீசரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த படத்திற்கு 'கராத்தே பாபு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இதில் ரவி மோகன் அரசியல்வாதியின் கெட்டப்பில் காணப்படுகிறார்.

மேலும் இந்த படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் ரவி மோகனின் இந்த படம் நிச்சயமாக ஹிட் அடிக்கும் என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள். தற்போது இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement