• Feb 27 2026

நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் அடுத்த திருமணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் நாட்டில்  தொலைக்காட்சி  பிரமுகராகவும் திரை நடிகையாகவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவரே  ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்குபெற்றி 4 வது  இடத்தையும் பெற்று இருந்தார். அதே வேளை குக்கு வித் கோமாளியில் போட்டியாளராக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.


 ரம்யா கடந்த வருடம் லவல் தவான் என்பவரை காதலித்து  திருமணம் செய்து இருந்தார். இவர்களது திருமணம் கங்கை நதிக்கரையில் மிகவும் எளிமையாக நடந்திருந்தது. அதேவேளை இவர் திடீர் என்று திருமணம் செய்து கொள்வார் என்பதனை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு இந்த திருமணம் இன்ப அதிர்ச்சியினை கொடுத்திருந்தது.


ரம்யாவின் திருமணம் முடிந்த அதேவேளை அவரது அண்ணா பரசு பாண்டியனுக்கு நலங்கு வைக்கின்ற படம் ஒன்று தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றது. பரசு பாண்டியன் சென்னையில் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மருத்துவ துறையினை படித்ததுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வாளராகவும்  வேலை செய்துள்ளார்.

பரசு பாண்டியன் தற்போது திருமணத்திற்கு தயாராகி கொண்டதனை ரம்யா மிகவும் சந்தோசமாக ஊடகங்களில்  share  பண்ணி வருகின்றார். இதனை பார்த்து ரம்யாவின் ரசிகர்களும் சந்தோஷத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement