விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளியான ரோமியோ, ஹிட்லர், மழை பிடிக்காத மனிதன் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதனால் ஒரு வெற்றிப் படம் என்றாலும் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய் ஆண்டனி காணப்படுகின்றார்.
விஜய் ஆண்டனி தயாரிக்கும் 22 ஆவது படத்திற்கு 'கனக மார்கன்' என பெயரிட்டுள்ளனர். அதன் பின்பு அக்னி சிறகுகள் என்ற படமும் உருவாகி வருகின்றது. இதற்கு இடையில் விஜய் ஆண்டனியின் 25வது படம் பற்றிய தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் 25வது படத்தின் பெயர் போஸ்டர் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. குறித்த படத்திற்கு தமிழில் 'சக்தி திருமகன்' என பெயரிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தெலுங்கில் 'பராசக்தி' என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து உள்ளதோடு இதனை அருண் பிரபு எழுதியுள்ளார். பான் இந்திய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை கோடை காலத்தில் ரிலீஸ் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 25 வது படத்திற்கும் 'பராசக்தி' என பெயரப்பட்டுள்ளது. தற்போது விஜய் ஆண்டனியும் தனது 25 வது படத்திற்கு பராசக்தி என பெயர் வைத்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இதில் யார் தமது படத்தின் டைட்டிலை மாற்றப் போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புயலடிக்கிற வேகத்தில் புழுதி குப்பைங்க இருக்குமா🔥
இவன் நடக்குற வேகத்த சகுனிக்கூட்டம் தாங்குமா👺#VA25 @ArunPrabu_ @vijayantonyfilm pic.twitter.com/XCxjv95UVH
Listen News!