சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4:30 மணி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  5.30 மணி ஆகியும் இன்னும் டீசர் வெளியாகவில்லை என்பதை அறிந்து ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. சூர்யா 10 வித்தியாசமான வேடங்களில் இந்த படத்தில் நடித்திருப்பதாகவும் இந்த படம் தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டது. 
இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருவதை அடுத்து சூர்யாவின் திரை உலக வாழ்க்கையில் இந்த படம் மிகவும் முக்கியமானது என்றும் கூறப்பட்டது.
 இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையை இன்று மாலை 4:30 இந்த படத்தின் டீசர் வெளியாகும் என்று நேற்றே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இந்த படத்தின் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது 5.30 மணி ஆகியும் இன்னும் வெளியாகவில்லை என்பது அறிந்து ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 இந்த நிலையில் இந்த படத்தின் படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டீசர் கண்டிப்பாக வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். ஒரு படத்தின் டீசரை கூட சரியான நேரத்திற்கு அறிவித்தபடி வெளியிட முடியாத அளவுக்கு கவனக்குறைவாக படக்குழுவினர் இருப்பதாக நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                            _690456f9b76d3.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _69018ba7ea1f8.jpeg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!