• Sep 29 2024

காந்தாரா ஹீரோவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கல்கி படக்குழுவினர்! எல்லாம் புஜ்ஜிக்காகவா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரபாஸ் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் கல்கி 28 98 ஏடி திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதன் டிக்கெட் புக்கிங் மட்டும் பல இடங்களில் அசுர வேகத்தில் நிரம்பி வருகின்றன. இந்தியாவை தாண்டியும் பிரபாஸின் இந்த கல்கி திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

இந்த படம் ரிலீசுக்கு தயாரான நிலையில், கல்கி படத்தின் ப்ரோமோஷன்களை டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் படக்குழுவினர் மும்முரமாக செய்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், கர்நாடகாவில் இந்த படத்தை ப்ரொமோட் செய்வதற்கு சரியான ஆள் காந்தாரா ஹீரோ தான் என ஸ்கெட்ச் போட்டு அவரை அணுகி உள்ளனர் படக் குழுவினர். அவரும் தற்போது தாறுமாறாக ப்ரமோஷன் செய்துள்ளார்.

அதன்படி காந்தாரா பட நடிகரான ரிஷப் செட்டி கல்கி படத்தின் ப்ரோமோஷனுக்காக புஜ்ஜி காரை ஒட்டி படக் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்பொழுது குறித்த  வீடியோ வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement