• Jan 28 2026

மணிமேகலை-ப்ரியங்கா சண்டையை இமிடேட் செய்த ராமர்-புகழ்... அதிருப்தியில் ரசிகர்கள்....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சமீபத்தில் விஜே மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5 ஷோவில் இருந்து வெளியேறியிருந்தார். அதற்கு காரணம் பிரியங்கா தான் என குற்றம்சாட்டி இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், பிரியங்காவுக்கு ஆதரவாக அவருக்கு நெருக்கமான பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். 


மணிமேகலை ப்ரியங்காவிற்கு சப்போட் செய்தவர்களை சொம்பு என குறிப்பிட்டிருந்தார் அதற்கு செருப்பு போட்டோவை பதிலடியாக பதிவிட்டார் மாகாபா ஆனந்த். இப்படி நாளுக்கு நாள் மணிமேகலை vs பிரியங்கா கேங் சண்டை சென்று கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இந்த வார எபிசோடின் ப்ரொமோ வெளியாகி இருக்கிறது. அதில் மணிமேகலை போல புகழ் மற்றும் பிரியங்கா போல ராமர் ஆகியோர் பேசி, அந்த சம்பவத்தை கலாய்ப்பது போல பேசி காட்டி இருக்கின்றனர். மணிமேகலை மீது இருக்கும் வன்மத்தை இப்படி காட்டி இருக்கிறார்கள் என CWC நடத்தும் நிறுவனம் மற்றும் விஜய் டிவியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். 




Advertisement

Advertisement