• Jan 19 2025

தமிழ்நாட்டு மானத்தையே வாங்கிட்டீங்களே..!! கார்த்திக்கு வலுக்கும் எதிர்ப்பு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி உள்ள திரைப்படம் தான் மெய்யழகன் இந்த திரைப்படம் நாளை மறுதினம் செப்டம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் காரணத்தினால் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி ஹைதராபாத்தில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி இயக்குனர் பெயர் குமார் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டார்கள். அதில் தொகுப்பாளினி  உங்களுக்கு லட்டு வேணுமா? என கார்த்தியிடம் கேட்க, அது சென்சிடிவ் ஆன விஷயம் அது தொடர்பாக பேச வேண்டாம் என கார்த்தி கூறினார். இவரின் பதிலை கேட்டு அரங்கில் இருந்த பலரும் கைதட்டி சிரித்தார்கள்.

இதன் காரணத்தினால் இந்த விவகாரத்தை நடிகரும் ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் கடுமையாக கண்டித்து இருந்தார். இதனால் நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தல  பக்கத்தில் பகிரங்கமாகவே மன்னிப்பு கேட்டார். அதன் பின்பு நடிகர் கார்த்தி கேட்ட மன்னிப்புக்கு பவன் கல்யாண் அவருக்கு உரிய பதிலினை உணர்ச்சிபூர்வமாக தெரிவித்து இருந்தார்.


மேலும் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்டு சினிமாவை வளப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடிகரான உங்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுக்கும் உங்களுடைய அண்ணன் சூர்யாவுக்கும் மனைவி ஜோதிகாவுக்கும் மெய்யழகன் படத்தின் ஒட்டுமொத்த படக் குழுவுக்கும் வாழ்த்துக்கள் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார் .

இந்த நிலையில், பவன் கல்யாணின் இந்த பதிவிற்கு நடிகர்களான சூர்யாவும் கார்த்தியும் 'உங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்களுக்கு நன்றி சார்' என கமெண்ட் செய்திருந்தார்கள். இதை பார்த்த பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தல பக்கத்தில் இவர்களை கலாய்த்து தள்ளியுள்ளார். இதோ அவருடைய பதிவுகள்,


Advertisement

Advertisement