• Oct 04 2024

மீனா கூறிய உண்மை! டான்ஸ் கிளாசில் நடக்கும் லீலைகளை கண்டுபிடித்த விஜயா? மனோஜிக்கு வரும் அதிஷ்ட்டம்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று கொலு வைப்பது தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். முத்து அதற்காக பொம்மைகளை வாங்கி வருகின்றார். அப்போது ஒரு பொம்மையை பார்த்து மீனா இதுதான் சங்கரா ரசம் போஸ்னு முத்துக்கிட்ட சொல்கிறார். இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்று கேட்க அன்று பார்வதி ஆண்டி வீட்டில் நடந்தவிடையத்தை கூறுகிறார். 


அப்போது  விஜய்யா என்னடி போட்டுக்கொடுக்குறியா என்று கேட்கிறார். அதற்கு மீனா இல்லை அத்தை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் என்று சொல்கிறார். அப்போது மனோஜும் தப்பா பார்த்தா எல்லாம் தப்பித்தான் தெரியும் என்று கூறுகிறார். முத்து மீனாவுக்கு சப்போட் பண்ணி கதைக்கிறார். அப்போது முத்து சரி மீனா சொன்னது தப்பா இருந்தா நீங்க செஞ்சி காட்டுங்கனு சொல்கிறார். அப்போது அண்ணாமலையும் சரி செய்து காட்டுனு சொல்ல முதலில் மறுத்த விஜயா பிறகு செய்து காட்டுகிறார். இதனை அணைவரும் பார்க்கிறார்கள்.


அதனை சுருதி வீடியோ எடுத்து வைக்கிறார். இதான் சிருங்கார ரசம் அதில்ல என்று கூறுகிறார். அப்போது மீனா ஆனா நான் பாத்தது இந்த சிலையில இருக்குறமாதிரித்தான் இருந்தாக என்றுகூறுகிறார். விஜய்யா நான் தப்பான பசங்கள என்னோட கிளாஸ்ல் சேர்க்கிறது இல்ல என்று கூறுகிறார்.  கடையில் மனோஜ் சோகமாக இருக்கிறதை பார்த்து ரோகிணி என்ன ஒருமாதிரி இருக்குற என்று கேட்கிறார். ரொம்ப போறா இருக்கு ரோகிணி வித்தியாவிற்கு கொடுத்த காசுக்கு வட்டியும் வரவில்லை நல்ல கஸ்டமர் வந்தா நல்லா இருக்கும் என்றுகூறுகிறார். 


அப்போது கடைக்கு வந்த ஒருவர் எல்லா பொருட்களையும் பார்த்து ஓடர் செய்கிறார். இப்பொது வேண்டாம் எனக்கு அதிஷ்ட்ட சீட்டில் காசு விழும் என்று ஜோசியர் சொல்லி இருக்காரு அப்போ எல்லாம் அனுப்புங்க என்று சொல்கிறார்.  மனோஜ் அவரை திட்டி அனுப்பிவிடுகிறார். பின்னர் ஒரு பாய் வந்து உங்கள கோவில் கிட்ட ஒருத்தர் வரசொன்னாரு என்று சொல்லி செல்கிறார். விஜய்யா டான்ஸ் கிளாசில் அந்த பொன்னும் பையனும் ஒன்றாக சிரிச்சி சிரிச்சி ஆடுவதை கண்காணிக்கிறார். 

Advertisement

Advertisement