• Jan 19 2025

ஆர்த்தி மீது ஜெயம் ரவி கொடுத்த பரபரப்பு புகார்.? பேரதிர்ச்சியில் திரையுலகினர்!

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஜெயம் ரவியின் வாழ்க்கையில் தற்போது தொடர்ந்து புயல் வீசுவது போல அடிக்கடி பல சர்ச்சைகள் எழுந்து உள்ளன. இதுவரையில் எந்த கிசுகிசுகளிளும் சிக்காது தனது கேரியரில் மட்டும் கவனம் செலுத்தி வந்த நடிகர்களுள் ஒருவர்தான் ஜெயம் ரவி. 

ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுக்கு பல காரணங்கள் பல கோணங்களில் அடித்துச் சொல்லப்பட்டாலும் முக்கிய காரணம் ஆர்த்தியின் கேரக்டர் தான் என கூறப்படுகின்றது.

ஜெயம் ரவி தனது விவாகரத்து செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், இது தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது இது ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதன் பின்பு பலரும் ஆர்த்திக்கு சப்போர்ட் பண்ணினார்கள். 

ஆனாலும் ஜெயம் ரவி அதற்குப் பிறகு அளித்த பேட்டியில் ஏற்கனவே ஆர்த்திக்கு இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், இரு வீட்டார்களும் கலந்து ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்ததாகவும், ஆர்த்தி ஏன் இப்படி சொல்கின்றார் என தனக்கு தெரியவில்லை எனவும் கூறியிருந்தார்.


இந்த நிலையில், தற்போது ஜெயம் ரவி சென்னை ஈசிஆர் இல் அமைந்திருக்கும் மனைவி ஆர்த்தியின் வீட்டிலுள்ள தனது உடைமைகளை மீட்டுத் தர வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். அதன்படி சென்னை ஈசிஆர் சாலை இல் உள்ள ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தருமாறு புகார் அளித்துள்ளார். இந்த விடயம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement