• Jan 19 2025

சொன்ன நம்புங்க..!! நான் தான் Director, ஜோவிகா தான் Producer..?? தீயாய் பரவும் வனிதா பேட்டி

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் வனிதா விஜயகுமார். ஆனாலும் இவர்களுடைய குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வனிதா தற்போது தனியாக வாழ்ந்து வருகின்றார்.

வனிதா விஜயகுமார் இதுவரை மூன்று திருமணங்கள் செய்த போதும் அவை அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன. இதன் காரணத்தினால் தற்போது தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகின்றார். அதில் ஜோவிகா இறுதியாக நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கு பற்றி இருந்தார்.

ஆரம்பத்தில் இவருக்கு அமோக வரவேற்பு இருந்தது. ஆனால் அதற்கு பின்பு இவரும் வனிதா போலவே பேசத் தொடங்கியதன் காரணத்தினால் ஜோவிகா மீது ரசிகர்கள் தமது வெறுப்பை கொட்டி தீர்த்தார்கள். ஒரு கட்டத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜோவிகா போட்டோ ஷூட் செய்வதை குறியாக கொண்டிருந்தார்.

அதன் பின்பு நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு அசிஸ்டன்ட்டாக பணிபுரிந்தார். இறுதியில் இவருடைய பங்களிப்பில் டீன்ஸ் படம் வெளியானது. இந்த படம் அமோக வரவேற்பை பெற்றது.


இந்த நிலையில், தற்போது வனிதா விஜயகுமார் அளித்த பேட்டியில் தான் தற்போது படம் ஒன்றில் கோ ப்ரொடியூஸராக பணி புரிவதாகவும், அதற்கு டைரக்டர் ஜோவிகா என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்தப் படம் தொடர்பான படப்பிடிப்புகள் தாய்லாந்தில் 70 வீதம் நடைபெற்றதாகவும் மீதமுள்ள 30 சதவீதம் இங்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது அவர் அளித்த பேட்டி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement