• Oct 13 2024

மலர் டீச்சர்க்கு அப்றம் நம்ம "பூங்கொடி டீச்சர்" தான்... பஞ்சிமிட்டாய் சேலை கட்டி பாடலை வைப் பண்ணும் ரசிகர்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கிய முதலாவது படத்திலேயே தனக்கு என தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். தற்போது வெளியான வாழை திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.  


ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன  வாழை திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இயக்குனர்கள் பலர் மாரி செல்வராஜை வெகுவாக பாராட்டி இருந்தார்கள்.


வாழை திரைப்படம் ரிலீசான அன்றிலிருந்து நிறைய வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் வாழை திரைப்படத்தில் பூங்கோடி டீச்சராக நடித்த நிகிலா விமல் அவர்கள் பஞ்சிமிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு மாணவர்கள் முன் ஆடும் அந்த நடனம் தான் அநேகமான ஆசிரியர் பிரியர்களை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவும்  தற்போது வைரலாகி வருகிறது. 

   

Advertisement