• Oct 08 2024

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவும் மணிமேகலை! இனி அதற்கு வாய்ப்பே இல்லையாம்..

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் தான் மணிமேகலை.  குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 8வது சீசனை தொகுத்து வழங்கி தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். இவர் ஆரம்பத்தில் சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக தனது வேலையை ஆரம்பித்தார். தற்போது முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக வளர்ந்து காணப்படுகின்றார்.

இசை தொலைக்காட்சியை தொடர்ந்து திருமணம் ஆன பிறகு விஜய் டிவியின் பக்கம் வந்தார். அதன் பிறகு இந்த தொலைக்காட்சியில்  நிறைய ஷோக்களை தொகுத்து வழங்கியும் போட்டியாளராகவும் பங்கு பற்றி கலகலப்பாக காணப்பட்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பற்றிய இவர், அதில் கோமாளியாகவும் ஒரு சில நேரங்களில் பங்கு பற்றி உள்ளார். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியில் தன்னை குக்காக வந்த தொகுப்பாளினி ஒருவர் தன்னை வேலை செய்ய விடாமல் இடையூறு செய்வதாக தெரிவித்து அதிரடியாகவே இந்த சீசனில் இருந்து வெளியேறி இருந்தார்.

இதைத்தொடர்ந்து மணிமேகலை குறிப்பிட்ட அந்த தொகுப்பாளினி பிரியங்கா தான் என அவருக்கு எதிராக பலரும் தனது கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள். ஆனாலும் நாளடைவில் பலர் பிரியங்காவுக்கு ஆதரவாகவே குரல் கொடுத்தார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய  பிரியங்கா மீது எந்த தப்பும் இல்லை மணிமேகலை கொஞ்சம் பொறுத்து போய் இருக்கலாம் என்ற வகையில் தெரிவித்து வந்தார்கள்.


இந்த நிலையில், விஜய் டிவியில் இருந்தாலும் குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் தயாரிப்பு குழுவுடன் மட்டும் இனி பணி புரியவே மாட்டேன் அதற்கு வாய்ப்பே இல்லை என மணிமேகலை கூறியுள்ளார். அத்துடன் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் எட்டாவது சீசனில் மணிமேகலை பங்கேற்கப் போகின்றார் என்ற செய்தியும் வலம் வந்தது.

அதேபோல குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரச்சினை ஏற்பட அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு செல்கின்றார் என்ற தகவலும் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement