• Oct 13 2024

அதிரவைக்கும் ஹிட்லர் ஸ்னீக் பீக் வீடியோ..! அடுத்த ஹிட் கொடுக்க தயாரான விஜய் ஆண்டனி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து ஒரு கட்டத்தில் நடிகராக களம் இறங்கியவர் தான் விஜய் ஆண்டனி. இவர் முதலில் அறிமுகமான நான் படம் ஒரு திரில்லர் படமாக காணப்பட்டது. அந்த படம் விஜய் ஆண்டனிக்கு செம்ம ஹிட் ஆனது. அதுபோலவே அதற்குப் பிறகு அவர் நடித்த சலிம் படமும் திரில்லர் படமாக காணப்பட்டது.

இதை தொடர்ந்து ஹிட் படங்கள் என்பதால் கமர்சியல் படம் பக்கம் வந்தார். அப்படி வெளியான பிச்சைக்காரன் படம் வசூலில் சக்கை போடு போட்டது. இதனால் அவருக்கு ஆந்திராவிலும் ரசிகர்கள் உண்டானார்கள். அதன் பின்பு விஜய் ஆண்டனி நடித்த படங்கள்  பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. அதன் காரணத்தினால் அவரே  இயக்குனராக மாறினார்.

அதன்படி அவர் இயக்கி நடித்து வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவ்வாறு இயக்கம், தயாரிப்பு, இசை, நடிப்பு என எல்லா  கோணங்களிலும் விஜய் ஆண்டனி கலக்கி வருகின்றார். தற்போது அதிக படங்களை கையில் வைத்திருக்கும் நடிகராகவும் காணப்படுகின்றார்.

அதில் ஹிட்லர் படமும் ஒன்று. சென்டிமென்ட் பார்க்காமல் தனது படங்களுக்கு நெகட்டிவ் ஆகவே தலைப்புகளை வைத்து வருகின்றார். இந்தப் படத்தை தனசேகரன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் கௌதம் வாசுதேவ மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஹிட்லர் திரைப்படம் இந்த வருடத்தில் வெளியாகும் விஜய் ஆண்டனி மூன்றாவது திரைப்படம் ஆகும்.


இந்நிலையில், இப்படத்தின் 4 நிமிட காட்சிகளை ஸ்னீக் பீக் வீடியோ என்கிற பெயரில் படக்குழு வெளியிட்டிருக்கிறது. மலைப்பகுதிகளில் வேலை செய்துவிட்டு பெண்கள் இரவில் ஆற்றைக்கடந்து செல்லும் போது வெள்ளம் அதிகமாகி அவர்கள் அதில் சிக்கிக்கொள்வது போன்ற் காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது. 

அதில் ஒரு கர்ப்பிணி பெண்ணாக இருக்கிறார். அனேகமாக அவருக்கு பிறக்கும் குழந்தைதான் விஜய் ஆண்டனியாக இருப்பார் என கணிக்கப்படுகிறது. இதுவும் ஒரு திரில்லர் படமாகவே உருவாகியிருக்கிறது. வருகிற 27ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement