• Jan 19 2025

பிரியங்கா பொத்திட்டு இருக்கணும்.! மணிமேகலை வெளில வந்திருக்கக் கூடாது! பயில்வான் பகிர்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சமூக வலைதள பக்கங்களில் பேசுபொருளாக காணப்படும் விடயங்களில் ஒன்றுதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம்பெற்ற பிரியங்கா - மணிமேகலைக்கு இடையிலான பிரச்சினை.

குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் தொகுப்பாளினியாக பங்கு பற்றிய மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் தனக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து விலகி இருந்தார். அதன் பின்பு இதற்கு காரணம் பிரியங்கா தான் என அவர் மீது பலரும் தமது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தார்கள். ஆனாலும் ஒரு சிலர் பிரியங்கா மீது தப்பில்லை என்று தமது கருத்துக்களை முன்வைத்து வந்தார்கள்.

இவ்வாறு இருவருக்கும் இடையிலான பிரச்சனையில் பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருவதால் இந்த பிரச்சனை புகைந்து புகைந்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த நிலையில், நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் இந்த விவகாரம் தொடர்பில் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.


அதன்படி அவர் பிரியங்காவை பற்றி கூறுகையில், அந்தப் பொண்ணு வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். நான் பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறேன். ஓவராக கத்துவதும் ஓவராக ஆட்டிட்யூட் பண்ணுவதும், 100 நடிகைகளுக்கு இணையான நடிப்பை நடிப்பார் என பிரியங்கா பற்றி தெரிவித்து இருந்தார். ஆனாலும் அவர் திறமைசாலி எனவும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் மணிமேகலை இப்படி ஒரு பிரச்சனை இருக்குது என்றால் அவர் பிரியங்கா ரூட்டிலேயே சென்று அவரை மடக்கி இருக்க வேண்டும் அதை விட்டுவிட்டு இப்படி வெளியில் வந்திருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement