• Oct 13 2024

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பைனல்.. மாஸ் என்ட்ரி கொடுத்த நடிகர்கள்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளினியாக பங்கு பற்றி வந்த மணிமேகலை இதிலிருந்து விலகி இருந்தார்.   

மணிமேகலை விலகியதற்கு காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பிரியங்கா தான் என அவருக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும் நாளடைவில் பிரியங்காவுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்க தொடங்கினார்கள். தற்போது வரையில் இந்த பிரச்சனை முடிவு இல்லாததாக பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனின் பைனல் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

குறித்த பைனல் நிகழ்ச்சியில் பிரியங்கா, ஷோயா, விடிவி கணேஷ் மற்றும் பூஜா ஆகியோர் போட்டியிட உள்ளார்கள். இதனால் ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து உள்ளார்கள்.


அதேவேளை, ஐந்து மணி நேரம் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி பைனலில் மெய்யழகன் படத்தை ப்ரொமோட் செய்வதற்காக கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரும் என்ட்ரி கொடுத்துள்ளார்கள். குறித்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டு உள்ளது.

அத்துடன் நடிகை ராதாவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த்சாமி தனக்கு நன்றாக சமைக்க தெரியும் என்றும், கார்த்திக்கு நன்றாக சாப்பிட தெரியும் என்று கூறியுள்ளார்.

Advertisement